மனைவியும், மகளும் கணவனின் வாள்வெட்டு தாக்குதலுக்கு இலக்கு

Kanimoli
3 years ago
மனைவியும், மகளும் கணவனின் வாள்வெட்டு தாக்குதலுக்கு இலக்கு

வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி J/432 கிராம அலுவலர் பிரிவில் மனைவியும், மகளும் கணவனின் வாள்வெட்டு தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர்.

குறித்த சம்பவம் நேற்று (15.12.2022) நண்பகல் இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த இருவரும் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தாய் மற்றும் மகள் ஆகியோர் வெற்றிலைக்கேணியில் உள்ள தமது உறவினர்கள் வீட்டில் தங்கியிருந்த சந்தர்ப்பத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குடும்பத்தகராறு காரணமாக மனைவி மற்றும் மகள் மீது கணவன் இவ்வாறு வாள்வெட்டு தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக தெரிவருகிறது.

அத்துடன் சம்பவம் இடம்பெற்ற போது கணவன் மது அருந்திய நிலையில் இருந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவத்தை தொடர்ந்து படுகாயமடைந்த தாயும், மகளும் கிளிநோச்சி வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டதுடன் சந்தேகநபர் அப்பகுதி மக்களால் மடக்கி பிடித்து கட்டிப்போடப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். 

காயமடைந்தவர்கள் கிளிநோச்சி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதுடன் சம்பவம் தொடர்பான விசாரணைகளை மருதங்கேணிப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4