அமைச்சரவையில் பதவியேற்றுக்கொண்ட உதயநிதி ஸ்டாலினுக்கு வைரமுத்து வாழ்த்து
Kanimoli
2 years ago
இன்றையதினம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் பதவியேற்றுக்கொண்ட உதயநிதி ஸ்டாலினுக்கு வைரமுத்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அமைச்சர் உதயநிதிக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
வைரமுத்து டுவிட்டரில் வாழ்த்து
இந்த நிலையில், புதிய அமைச்சராக பதவியேற்றுள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு கவிஞர் வைரமுத்து டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கவிஞர் வைரமுத்து அவரது பதிவில்,
“உள்ளங்கவர் உதயநிதி! கலைஞர் குடும்பம் உங்களுக்குத் தந்தது அறிமுகம் மட்டும்தான். இன்னொரு முகம் இருக்கிறது; அறிவு முகம்; செயலால் மட்டுமே அடைவது. உங்கள் செயலால் வாரிசு என்ற வசை கழியுங்கள். தளபதி மகனே வருக தமிழர்க்கு மேன்மை தருக!. அமைச்சர் உதயநிதிக்கு வாழ்த்துக்கள்!” எனபதிவிட்டுள்ளார்.