தமிழக அமைச்சரவையில் 35-வது அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் ஆளுநர் மாளிகையில் இன்று பதவியேற்றுள்ளார்.

Kanimoli
3 years ago
தமிழக அமைச்சரவையில் 35-வது அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் ஆளுநர் மாளிகையில் இன்று பதவியேற்றுள்ளார்.

தமிழக அமைச்சரவையில் 35-வது அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் ஆளுநர் மாளிகையில் இன்று பதவியேற்றுள்ளார்.

தமிழக முதல்-அமைச்சவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 33 அமைச்சர்களைக் கொண்ட அமைச்சரவை கடந்தாண்டு மே மாதம் பொறுப்பேற்றது.

ஒன்றரை ஆண்டுகள் கழித்து, தற்போது அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படுகிறது. அதன்படி திமுக இளைஞரணி செயலாளரும், முதல் அமைச்சரின் மகனுமான உதயநிதிக்கு அமைச்சரவையில் தற்போது இடமளிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இன்று காலை 9.30 மணியளவில் கவர்னர் மாளிகையில் உள்ள தர்பார் அரங்கில், நடைபெற்ற பதவியேற்பு விழாவில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை பதவியேற்று கொண்டார்.

அவருக்கு, பதவிப்பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் கவர்னர் ஆர்.என்.ரவி செய்து வைத்தார்.

இந்த விழாவில் அமைச்சர்கள், திமுக கூட்டணி கட்சிகளின் தலைவர்கள், பேரவை கட்சித் தலைவர்கள், தலைமைச் செயலர் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் முதல்-அமைச்சர் குடும்பத்தினர் பங்கேற்றனர். 

மேலும் ஊடகவியாளருக்கு அளித்த பேட்டியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திரைப்படங்களில் நடிக்கப்போவதில்லை என அறிவித்துள்ளார். 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4