போதைப் பொருள் விநியோகம்?

யார் இதை விநியோகிப்பது? உண்மையை கூறப்போனால் இந்த போதை பொருட்களை விற்பவனுக்கே தெரியாது இதை யாரூடாக வருகிறது என. இருந்தும் அவன் எதற்க்கு இத்தொழிலை செய்யவேண்டுமென்று கேட்டால் இலகுவாக அதிக பணம் தேட, போதைவஸ்துக்கு அடிமையானதால், தொழில்வாய்ப்பு இன்மை என பலவாறாகக்கூறலாம்.
ஆனால் இதில் பாதுகாப்போடு அதிக பணம் உழைப்பது பெரும் பணம், வசதி, பாதுகாப்பு, பெரிய அதிகாரிகளின் தொடர்பு உடைய பண முதலைகளே. இவ்வியாபாரிகளின் கீழ் இயங்கும் முகவர்களில் பலர் இப்போதைக்கு அடிமையானவர்களே. வாங்கி விற்பதில் வரும் இலாபத்தில் போதைப் பொருட்களை உபயோகித்துக்கொள்ள இவ்வியாபாரத்தை கண்மூடித் தனமாக செய்கிறார்கள்.
முதலில் இவ்வியாபாரிகள் நட்புக்களோடு சேர்ந்து பாவிக்க ஆரம்பித்து பின்னர் அதற்க்கு அடிமையாகி, பின்னர் தனது தேவையை பூர்த்திசெய்ய வியாபாரியாகி அதில் வரும் இலாபத்தில் தான் தனது தேவைகளைப் பூர்த்தி செய்கிறான். தொடரும் போதைப்பொருள் விற்பனை திட்டமிட்டது அல்ல. திடுக்கிடும் உண்மைகளின் கேள்வி பதில்



