கொழும்பில் திடீரென குவிக்கப்பட்ட பொலிஸார்
Prabha Praneetha
2 years ago
மருதானை, தெமட்டகொட மற்றும் கிராண்ட்பாஸ் ஆகிய பொலிஸ் பிரிவுகளை உள்ளடக்கி விசேட பொலிஸ் சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மாளிகாவத்தை பொலிஸ் நிலையத்தினால் நேற்று இரவு 8.00 மணி முதல் 10.00 மணி வரை இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
10 பிடியாணை பிறக்கப்பட்ட சந்தேக நபர்கள், 01 கிராம் மற்றும் 860 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளை வைத்திருந்த 08 சந்தேகநபர்கள் மற்றும் 155 மில்லிகிராம் ஹெரோயின் வைத்திருந்த இரண்டு சந்தேக நபர்களும் குறித்த நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்டுள்ளனர்.