இலங்கையில் மின்சார நுகர்வு 12 சதவீதத்தால் வீழ்ச்சி!
Nila
2 years ago
இந்த வருடம் நாட்டின் மின்சார நுகர்வு 12 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
ஹட்டன் பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.
அடுத்த வருடம் வறட்சி ஏற்படும் என இலங்கை மின்சார சபை கூறுவதில் எவ்வித அடிப்படையும் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் கடந்த காலங்களில் மின்சார விநியோகத் தடை மற்றும் கட்டண அதிகரிப்பு என்பன காரணமாக நுகர்வு குறைந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.