கவரவில பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் ஒன்று காவல்துறையினரால் மீட்பு
Kanimoli
2 years ago
மஸ்கெலியா சாமிமலை, கவரவில பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் ஒன்று காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் இன்று (10) இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
33 வயது நபரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.
இந்நிலையில், குறித்த சடலம் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் உள்ள பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் மஸ்கெலியா காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.