இன்று காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை நீர் வெட்டு அமுல்
Prabha Praneetha
2 years ago

கொழும்பு மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று10 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
இன்று காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என அந்த சபை தெரிவித்துள்ளது.
குறித்த காலப்பகுதியில் கொழும்பு, தெஹிவளை, கல்கிஸ்ஸ, கோட்டே, கடுவெல மாநகர சபை பகுதிகள், மஹரகம, பொரலஸ்கமுவ, கொலன்னாவ நகரசபை பகுதிகள், கொட்டிகாவத்தை, முல்லேரிய பிரதேச சபை பகுதிகள் மற்றும் இரத்மலானை மற்றும் கட்டுபெத்த ஆகிய பகுதிகளுக்கு நீர் வெட்டு அமுல்படுத்தப்படும்.



