அரச ஊழியர்கள் ஓய்வு பெறும் கட்டாய வயது தொடர்பில் வர்த்தமானி வெளியீடு!
Nila
3 years ago
அனைத்து அரச ஊழியர்களும் 60 வயதில் கட்டாயம் சேவையிலிருந்து ஓய்வு பெற வேண்டும் என்ற வர்த்தமானி வெளியானது.
பிரதமர் தினேஷ் குணவர்தனவின் கையொப்பத்துடன் இந்த அதிவிசேட வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது.
இந்த வர்த்தமானி அறிவித்தல் எதிர்வரும் ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் அமுலாக்கப்படவுள்ளது.
அரசியலமைப்பினூடாக அல்லது ஏனைய சட்டங்களின் ஊடாக கட்டாய ஓய்விற்கான வயதெல்லை குறிக்கப்பட்டுள்ள ஊழியர்கள் தவிர்ந்த ஏனைய அனைத்து அரச ஊழியர்களும் 60 வயதில் கட்டாயம் ஓய்வு பெற வேண்டும் என இந்த அதிவிசேட வர்த்தமானியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.