இலங்கையில் இன்று நள்ளிரவு முதல் குறைவடையும் எரிபொருளின் விலை
Nila
2 years ago
இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் டீசல் விலையில் திருத்தம் மேற்கொள்ள இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் லங்கா ஐஓசி நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன.
இதற்கமைய, டீசல் லீற்றர் ஒன்றின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளது.
இதன்படி, தற்போது 430 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படும் ஒரு லீற்றர் டீசல் இன்று நள்ளிரவு முதல் 420 ரூபாவாக குறைக்கப்படவுள்ளது.