மதவாச்சி நோக்கிப் பயணித்த ரயில் மோதி குடும்பஸ்தர் பலி
Prathees
2 years ago
வவுனியா மெனிக்பாம் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் மன்னாரிலிருந்து மதவாச்சி நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த ரயிலில் மோதுண்டு உயிரிழந்துள்ளார்.
இ இன்று (04) காலை 7.30 மணியளவில் ரயில் கடவையைக் கடக்க முயன்ற போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் செட்டிகுளம் துடரிக்குளம் பகுதியை சேர்ந்த கந்தையா மோகனதாஸ் என்ற 55 வயதுடைய குடும்பஸ்தரே உயிரிழந்துள்ளார்.
செட்டிகுளம் பகுதியில் உள்ள தனது வீட்டிலிருந்து விவசாய காணியினை பார்வையிடுவதற்காக மெனிக்பாம் நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்த போதே இந்த விபத்து சம்பவித்துள்ளது.
இச் சம்பவம் தொடர்பான விசாரணைகளை பறையனாலங்குளம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.