தொழிலாளர்களின் வறுமைக்கு முக்கிய காரணம் இந்நாட்டின் இடதுசாரி இயக்கம் - அமைச்சர் மனுஷ நாணயக்கார
Prathees
2 years ago

இந்த நாட்டில் இடதுசாரி இயக்கம் தொழிலாளியை வழி நடத்துவதே தொழிலாளி பணக்காரனாக இல்லாததற்கு முக்கிய காரணம் என தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
இதன் விளைவாக, இந்த நாட்டில் உள்ள தொழிலாளி புதுமையான தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்குப் பழக்கப்பட்டவர் அல்ல என்றும் அமைச்சர் கூறினார்.
தொழிலாளியை பணக்காரர்களாக மாற்ற வேண்டுமானால் தொழில் முயற்சியை அதிகரிக்க வேண்டும் என்றும் அமைச்சர் மனுஷ நாணயக்கார குறிப்பிட்டார்.
இதுவரையில் ஆட்சியில் இருந்த அனைத்து அரசாங்கங்களும் தொழில் முயற்சியாளர்களை கட்டியெழுப்புவதில் கவனம் செலுத்தாமல் தொழிலாளர்களின் நலனில் மாத்திரம் கவனம் செலுத்துவதனால் இலங்கையில் தொழில்முனைவோர் பற்றாக்குறை நிலவுவதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.



