அரசாங்கத்திற்கு சொந்தமான வாகனங்கள் தொடர்பில் நிதியமைச்சு விசேட தீர்மானம்
Kanimoli
2 years ago

அரச அதிகாரிகளின் உத்தியோகபூர்வ பணிகளுக்காக வழங்கப்படும் அரசாங்கத்திற்கு சொந்தமான வாகனங்கள் தொடர்பில் நிதியமைச்சு விசேட தீர்மானம் ஒன்றை எடுத்துள்ளது.
அதன்படி, அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்படும் வாகனங்களின் உரிமையை அவர்கள் ஓய்வுபெற்றவுடன் அவர்களின் பெயருக்கே மாற்றுவதை உடனடியாக இடைநிறுத்துவதற்கு நிதி அமைச்சு தீர்மானித்துள்ளது.
அதேவேளை நாட்டில் ஏற்பட்ட நெருக்கடி நிலையை அடுத்து அந்நிய செலாவணி நெருக்கடி காரணமாக வாகனங்களை இறக்குமதி செய்வதை அரசாங்கம் கட்டுப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.



