தென் கொரிய யூடியூபரின் லைவ்ஸ்ட்ரீமிங்கின் போது தவறாக நடக்க முயன்ற வாலிபர்கள் கைது

தென் கொரியாவைச் சேர்ந்த மியோச்சி என்ற யூடியூபர் செவ்வாய்கிழமை இரவு மும்பையில் ஒரு பரபரப்பான தெருவில் நேரடி ஒளிபரப்பு செய்து கொண்டிருந்தார். அப்போது இரு இளைஞர்கள் பைக்கில் லிப்ட் கொடுப்பது போல் அவரது கையைப் பிடித்து வலுக்கட்டாயமாக இழுத்தனர்.
மியோச்ச் அவர்களிடம் நோ நோ என்று கூறுகிறார். இதற்கிடையில் அவர்களில் ஒருவர் அவளை முத்தமிட முயன்றார். இளைஞர்களின் பிடியில் இருந்து தப்பிக்க முயன்றும் அவர் விடவில்லை. அவர்கள் அவளைப் பின்தொடர்ந்து வாகனத்தில் ஏறும்படி வற்புறுத்தினார்கள்.
அவள் எனது வீடு பக்கத்தில் தான் என்று சொன்னபோதும் கேட்கவில்லை. இந்த சம்பவத்தின் வீடியோவை மியோச்சி தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.லைவ் ஸ்ட்ரீம் பண்ணும்போது 2 நபர்கள் என்னைத் துன்புறுத்தினார்கள். நிலைமையை மோசமாக்காமல் அதிலிருந்து விடுபட நான் என்னால் முடிந்தவரை முயற்சித்தேன்.
நான் தெருக்களில் நேரடி ஒளிபரப்பு செய்யவது குறித்து இந்தச் சம்பவம் என்னை யோசிக்க வைத்து உள்ளது என கூறி உள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதால், மும்பை போலீசார் "நீங்கள் கூறியதை நாங்கள் பரிசீலிப்போம்.
நீங்கள் நேரடியாக எங்களுக்கு தகவல் அனுப்புங்கள்" என்று டுவீட் செய்துள்ளனர். இதற்கு பதிலளித்த மியோச்சி.. உங்களுக்கு தகவல் அனுப்ப வழி தெரியவில்லை. நீங்கள் நேரடியாக செய்தி அனுப்புங்கள்.
அதன் அடிப்படையில் நான் உங்களுக்கு தேவையான தகவல்களை தர முடியும் என கூறினார் இந்த சம்பவம் கர் காவல் நிலையத்தில் நடந்ததால் போலீசார் தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்துள்ளனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் மொபின் சந்த் முகமது ஷேக் (19) மற்றும் முகமது நகிப் சதாரைலம் அன்சாரி (20) என அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டனர்.



