ஸ்பெயினை அச்சுறுத்தும் லெட்டர் குண்டுகள்-அமெரிக்க தூதரகத்தில் கிடந்த மர்ம பையால் பரபரப்பு
Prasu
2 years ago

ஸ்பெயின் நாட்டில் முக்கிய தலைவர்களை மிரட்டும் வகையில் அனுப்பப்பட்ட லெட்டர் குண்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முதல் லெட்டர் குண்டு கடந்த மாதம் 24ம் தேதி பிரதமர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டது.
அதன்பின்னர் நேற்றும் இன்றும் 4 குண்டுகள் அனுப்பப்பட்டுள்ளன. அவை அனைத்தும் செயலிழக்கச் செய்யப்பட்டன. இதையடுத்து பொதுத்துறை அலுவலகங்களுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே தலைநகர் மாட்ரிட்டில் உள்ள உக்ரைன் தூதரகத்திற்கு நேற்று வந்த ஒரு லெட்டர் குண்டு வெடித்தது.
கடிதங்களை கையாளும் ஊழியர் காயமடைந்தார். வெடிகுண்டு வெடித்த சம்பவத்தைத் தொடர்ந்து அதிகாரிகள் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
மேலும், தூதரகத்தில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக விரிவான விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.



