கொழும்பில் 15மணித்தியால நீர்வெட்டு- வெளியான விசேட அறிவிப்பு!
Nila
2 years ago

அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக கொழும்பில் நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.
அதற்கமைய, கொழும்பு 11, 12, 4, 13, 14 மற்றும் 15 ஆகிய இடங்களில் வெள்ளிக்கிழமை (02) இரவு 10.00 மணி முதல் சனிக்கிழமை (03) பிற்பகல் 1.00 மணி வரை 15 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது



