தலைமறைவான சீன கோடீஸ்வரரான ஜேக் மா

#China
Keerthi
2 years ago
தலைமறைவான சீன கோடீஸ்வரரான ஜேக் மா

சமீப காலமாக தலைமறைவாக இருந்த சீன தொழிலதிபர் ஜேக் மா கடந்த 6 மாதமாக ஜப்பானில் வசிப்பது தெரிய வந்துள்ளது.

சீன கோடீஸ்வரரான ஜேக் மா, ஆன்ட், அலிபாபா என்ற ஆன்லைன் நிறுவனங்களை நடத்தி வந்தார். இவர் சீனாவில் அரசு நடத்தும் வங்கிகள் அடகு கடைகள் போல் செயல்படுவதாக கடந்த 2020ம் ஆண்டு குற்றம் சாட்டினார். 

அரசு வங்கிகளை விமர்சித்ததை தொடரந்து அவரது நிறுவனங்களில் சீன அரசு அதிரடி சோதனை நடத்தியது. இதில் ஆன்ட் நிறுவனத்தின் ரூ.3.02 லட்சம் கோடி, அலிபாபா நிறுவனத்தின் ரூ.16,980 கோடி மதிப்பு சொத்துக்கள் கடந்தாண்டு பறிமுதல் செய்யப்பட்டது.

இதை தொடர்ந்து கடந்த 2020 நவம்பரில் ஜேக் மா மாயமானார். அவர் எங்கு இருக்கிறார் என்ற தகவல் யாருக்கும் தெரியவில்ைல. அவரும் அவரது குடும்பத்தினரும் வீட்டுச் சிறையில் இருப்பதாக செய்திகள் வெளியானது. 

இந்நிலையில், ஜேக் மா தனது குடும்பத்தினருடன் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டுள்ளது. கடந்த 6 மாதத்துக்கு முன் ஜப்பானில் தஞ்சம் அடைந்தது தெரிய வந்துள்ளது. 

மேலும், கடந்தாண்டு முதல் அவர் தனது குடும்பத்துடன் அமெரிக்கா, இஸ்‌ரேல், ஸ்பெயின், நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு சென்ற தகவலும் வெளியாகியுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!