புகையிரத கட்டுப்பாட்டாளர்கள் மேற்கொண்ட பணிப்பகிஷ்கரிப்பால் ரயில்கள் தாமதம்
Keerthi
2 years ago
இன்று பிற்பகல் இயக்கப்பட வேண்டிய பல ரயில்கள் தாமதமாக இயக்கப்படுவதால் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
புகையிரத பெட்டியொன்றின் குளிரூட்டும் முறைமையில் ஏற்பட்ட கோளாறு தொடர்பான பிரச்சினையை அடிப்படையாகக் கொண்டு இன்று (29) பிற்பகல் புகையிரத கட்டுப்பாட்டாளர்கள் மேற்கொண்ட பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக இது இடம்பெற்றுள்ளது.
வேலைநிறுத்தத்தின் தாக்கம் காரணமாக கரையோரப் பாதையில் ஆரம்பிக்கும் பல ரயில்கள் கொழும்பு கோட்டையிலிருந்து ஆரம்பிக்கப்பட்டதாக ரயில்வே திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிலும் புகையிரத ஒழுங்குமுறை அதிகாரிகள் முறைப்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.