கொழும்பில் 12மணி நேரம் நீர் விநியோகம் தடை!
Prabha Praneetha
2 years ago

அவசர பராமரிப்பு பணிகள் காரணமாக கொழும்பில் 12 மணி நேரம் நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
அதன்படி நாளை காலை 9.30 மணி முதல் 12 மணி நேரம் களுத்துறை உள்ளிட்ட பல பகுதிகளுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய வாதுவ, வஸ்கடுவ, பொதுப்பிட்டிய, மொரந்துடுவ, களுத்துறை வடக்கு மற்றும் தெற்கு, கட்டுகுருந்த, நாகொட உள்ளிட்ட பகுதிகளுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை குறிப்பிட்டுள்ளது.



