இலங்கைக்கான ஐ.நா காரியாலயத்திற்கு முன்பாக தற்போது போராட்டமொன்று முன்னெடுப்பு

Kanimoli
3 years ago
இலங்கைக்கான ஐ.நா காரியாலயத்திற்கு முன்பாக தற்போது போராட்டமொன்று முன்னெடுப்பு

கொழும்பு - பௌத்தாலோகமாவத்தையில் அமைந்துள்ள இலங்கைக்கான ஐ.நா காரியாலயத்திற்கு முன்பாக தற்போது போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

வசந்த முதலிகே மற்றும் சிறிதம்ம தேரர் ஆகியோரின் விடுதலையை வலியுறுத்தியும், அரசாங்கத்தின் அடக்குமுறைக்கு எதிராகவும் இந்த போராட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர், சிவில் செயற்பாட்டாளர்கள் மற்றும் காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் உள்ளிட்ட பலர் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

அத்துடன் அப்பகுதியில் போராட்டத்தில் ஈடுபட வேண்டாம் என பொலிஸார் அறிவுத்தியுள்ள போதும், அதனை மீறி போராட்டம் தொடர்ந்து வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். 

இந்த நிலையில் பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகத்திற்கு ஆயத்தம் செய்துள்ள நிலையில் அப்பகுதியில் பதற்ற நிலை நிலவி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. 

மேலும் போராட்டம் இடம்பெறும் பகுதியில் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டுள்ள பொலிஸாருடன் போராட்டக்காரர்கள் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டு வருவதுடன், தமக்கு பொலிஸாரின் ஆதரவு தேவை எனவும் கோரி வருகின்றனர்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4