பொலிஸ் உயர் அதிகாரி கழுத்தில் பிடித்தமை தவறில்லை - பாதிக்கப்பட்ட பெண் பொலிஸ் உத்தியோகத்தர்கள்

Kanimoli
2 years ago
பொலிஸ் உயர் அதிகாரி கழுத்தில் பிடித்தமை தவறில்லை - பாதிக்கப்பட்ட பெண் பொலிஸ் உத்தியோகத்தர்கள்

பொலிஸ் உயர் அதிகாரி கழுத்தில் பிடித்தமை தவறில்லை என பாதிக்கப்பட்ட பெண் பொலிஸ் உத்தியோகத்தர்கள் தெரிவித்துள்ளனர்.

அண்மையில் இடம்பெற்ற போராட்டம் ஒன்றின் போது உயர் பொலிஸ் அதிகாரியொருவர் இரண்டு பெண் பொலிஸ் உத்தியோகத்தர்களை கழுத்தில் பிடித்து தள்ளும் காணொளி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட இரண்டு பெண் பொலிஸ் உத்தியோகத்தர்களும் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

உயர் அதிகாரியின் செயற்பாட்டினால் தமக்கு எவ்வித பிரச்சினையும் கிடையாது என பெண் பொலிஸ் உத்தியோகத்தர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, கடமையில் ஈடுபடுவதனை ஊக்கப்படுத்தும் நோக்கில் தாம் இரு உத்தியோகத்தர்களையும் கழுத்தில் பிடித்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள குறித்த பிரதம பொலிஸ் பரிசோதகர் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!