தற்காலிக வாகன சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டவர்களுக்கு உத்தியோகபூர்வ சாரதி அனுமதி அட்டைகள்: மோட்டார் போக்குவரத்து திணைக்களம்
Mayoorikka
2 years ago
தற்காலிக வாகன சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டவர்களுக்கு உத்தியோகபூர்வ சாரதி அனுமதி அட்டைகள் வழங்கப்படும் என மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் உத்தியோகபூர்வ சாரதி அனுமதி அட்டைகள் வழங்கப்படும் எனவும் மோட்டார் போக்குவரத்து திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
உத்தியோகபூர்வ சாரதி அனுமதிப்பத்திர அட்டைகள் தபால் மூலம் வழங்கப்படும் என மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் நிஷாந்த வீரசிங்க தெரிவித்துள்ளார்.
அதன்படி சுமார் 600,000 பேருக்கு சாரதி அனுமதிப்பத்திர அட்டைகள் வழங்கப்படவுள்ளதாகவும், இந்த விநியோகம் சில வாரங்களில் நிறைவடையும் என்றும் நிஷாந்த வீரசிங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.