22,000 மெற்றிக் தொன் யூரியா உரத்தை இறக்கும் பணிகள் ஆரம்பம்!
Reha
2 years ago

உலக வங்கியின் உதவியுடன் இலங்கைக்கு வழங்கப்பட்ட 22,000 மெற்றிக் தொன் யூரியா உரத்துடன் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த இரண்டாவது கப்பலில் இருந்து உரத்தை இறக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இம்முறை பெரும்போகத்தில் நெல் மற்றும் சோளப் பயிர்களுக்குத் தேவையான யூரியா உரத்தை கொள்வனவு செய்வதற்கு உலக வங்கி 105 மில்லியன் டொலர் நிதி ஒதுக்கீட்டை வழங்கியது.
அதன் கீழ், 13,000 மெற்றிக் தொன் உரம் இதற்கு முன்னர் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டிருந்தது
இதேவேளை, அரசாங்கத்தினால் வழங்கப்படும் இயற்கை உரங்கள் முறையான தரங்களுக்கு உட்பட்டவையல்ல என்று விவசாயிகள் குற்றம் சுமத்துகின்றனர்
அம்பாறை பிரதேசத்தில் கல் ஓயா இடது கரை இயக்கத்தின் விவசாயிகள் குழுவினால் நேற்று நடத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இந்த குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.



