2030 ஆண்டளவில் வான்பரப்பில் இருந்து விவசாயத்துறை நடவடிக்கைகளுக்கு ஆற்றக்கூடிய பங்களிப்பை மேம்படுத்த முடிவு

Kanimoli
2 years ago
2030 ஆண்டளவில் வான்பரப்பில் இருந்து விவசாயத்துறை  நடவடிக்கைகளுக்கு ஆற்றக்கூடிய பங்களிப்பை மேம்படுத்த முடிவு

2030 ஆண்டளவில் வான்பரப்பில் இருந்து விவசாயத்துறை மற்றும் ஆராய்ச்சி நடவடிக்கைகளுக்கு ஆற்றக்கூடிய பங்களிப்பை 27 வீதத்திலிருந்து 32 வீதம் வரை மேம்படுத்துவதற்கு இலங்கை விமான படை எதிர்பார்த்துள்ளது.

இந்த இலக்கை நோக்கி இலங்கை விமான படை கட்டம்கட்டமாக முன்னேறி வருகிறது.

இதனடிப்படையில், வான்பரப்பிலிருந்து பயிர் விதைகளை தூவும் நடவடிக்கைகளின் ஏழாவது கட்டம் அண்மையில் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.

இலங்கை விமான படைக்கு சொந்தமான நான்காம் இலக்க போக்குவரத்து உலங்குவானூர்தி ஒன்று இதற்கென பயன்படுத்தப்பட்டது.

சியம்பலாண்டுவ பிரதேச செயலகத்திற்குரித்தான சுமார் 80 ஏக்கர் நிலப்பரப்பை தழுவக் கூடியவாறு பயிர் விதைகள் தூவப்பட்டன.

இதுவிடயம் தொடர்பில் பேராதனை பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் அறிவுரைகளும் யோசனைகளும் பெற்றுக்கொள்ளப்பட்டன

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!