தாக்குதல் குறித்து விசாரணை நடத்த பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டுக்கு இம்ரான்கான் வலியுறுத்தல்

Prasu
2 years ago
தாக்குதல் குறித்து விசாரணை நடத்த பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டுக்கு இம்ரான்கான் வலியுறுத்தல்

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் கடந்த 3-ந் தேதி பஞ்சாப் மாகாணத்தில் அரசுக்கு எதிராக நடந்த பேரணியில் பங்கேற்றிருந்தபோது, அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அவரை துப்பாக்கியால் சுட்டார். இதில் அவரது வலது காலில் குண்டு பாய்ந்த நிலையில் அவர் உயிர் தப்பினார்.

இதையடுத்து, லாகூரில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட இம்ரான்கானுக்கு வலதுகாலில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. தனது காலில் இருந்து 3 துப்பாக்கி குண்டுகள் அகற்றப்பட்டதாக இம்ரான்கான் கூறினார்.

இந்த நிலையில் தன்னை கொல்ல முயன்ற இந்த சதி திட்டத்தின் பின்னணியில் பிரதமர் ஷபாஸ் ஷெரீப், உள்துறை மந்திரி ராணா சனவுல்லா மற்றும் மூத்த ராணுவ அதிகாரி பைசல் நசீர் ஆகியோர் இருப்பதாக இம்ரான்கான் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார்.

துப்பாக்கி சூடு தொடர்பாக இம்ரான்கான் தரப்பில் பஞ்சாப் மாகாண போலீசாரிடம் அளிக்கப்பட்ட புகாரில் பிரதமர், உள்துறை மந்திரி மற்றும் ராணுவ அதிகாரியின் பெயர்கள் குறிப்பிடப்பட்டிருந்தன. இதனால் அந்த புகாரை ஏற்று வழக்கு பதிவு செய்ய போலீசார் மறுத்து வந்தனர்.

போலீசார் வழக்கு பதிவு செய்தது குறித்து பேசிய அவர், "ஒரு முன்னாள் பிரதமரால் அவரது புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்ய முடியவில்லை என்றால், பாகிஸ்தானில் உள்ள ஒரு சாமானியருக்கு என்ன நடக்கும் என்று கற்பனை செய்யலாம். எனவே இதுகுறித்தும் சுப்ரீம் கோர்ட்டு விசாரணை நடத்திய சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை வேண்டும்" என்று கூறினார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!