இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர்- இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் இடையில் சந்திப்பு!
Mayoorikka
2 years ago

இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட, இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் குமார் டோவலை இன்று புதுடில்லியில் சந்தித்து, இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவுகளின் தற்போதைய நிலை குறித்து ஆய்வு செய்தார்.
இலங்கை உயர் ஸ்தானிகர் மற்றும் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஆகியோருக்கு இடையிலான வழக்கமான மற்றும் தொடர் உரையாடலின் ஒரு பகுதியாகவே இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
அத்துடன் இரண்டு நாடுகளின் பரஸ்பர நலன்கள் மற்றும் எதிர்கால ஒத்துழைப்புக்கான முன்னுரிமைப் பகுதிகள் தொடர்பான பல்வேறு பிரச்சினைகள் குறித்தும் அவர்கள் விவாதித்தனர்.



