மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ராலின் பொருளாதார கொலையாளிகள் மத்தியில் என்ற நூல் வெளியீடு!

இலங்கையின் மிக மோசமான பொருளாதார நெருக்கடிக்கு காரணம் என விமர்சிக்கப்பட்ட நபர்களில் ஒருவரான மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால், "பொருளாதார கொலையாளிகள் மத்தியில்" என்ற புதிய நூலை 2500 ரூபாய் விலையில் வெளியிட்டுள்ளார்.
இந்த நூல் சிங்கள மொழியில் எழுதப்பட்டுள்ளது.
கப்ரால் கடந்த வாரம் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தினால் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்ட நிலையில், இந்த நூல் வெளியிடப்பட்டுள்ளது. கப்ராலை 10 மில்லியன் ரூபா சரீரப் பிணையில் செல்ல கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெகுனாவல அனுமதித்தார்.
இதேவேளை, நீதிமன்றத்திற்கு வெளியே, காப்ராலிடம் கேள்வி எழுப்பிய, செய்தியாளர்கள், நாட்டிற்கும் நாட்டு மக்களுக்கும் செய்த வேலைகளுக்கு மத்தியில் இரவில் எப்படி நிம்மதியாக தூங்குகிறீர்கள் என்று கேட்டனர்.
அதற்கு பதிலளித்த கப்ரால், தாம் நன்றாக தூங்குவதாகவும், தாம், மக்களுக்கு எதிராக எதுவும் செய்யவில்லை. தாமே நாட்டை திவாலாகும் நிலையிலிருந்து காப்பாற்றினேன். எனினும் மக்கள் எதையும் சொல்லலாம், என்றும் கூறினார்.



