தனி நபரொருவர் வாழ்க்கை நடத்துவதற்கு குறைந்தபட்சம் 13 ஆயிரம் 772 ரூபா தேவை - புள்ளிவிவரத் திணைக்களம் அறிக்கை
Prasu
2 years ago
இலங்கையில் செப்டம்பர் மாதம் தனி நபரொருவர் வாழ்க்கை நடத்துவதற்கு குறைந்தபட்சம் 13 ஆயிரம் 772 ரூபா தேவையென குடிசன மற்றும் புள்ளிவிவரத் திணைக்களம் வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஜூலை மாதத்தில் இத்தொகை 13 ஆயிரத்து 138 ரூபாவாக இருந்தது. இந்நாட்டில் தனி நபரொருவர் தனது குறைந்த பட்ச தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்கு குறைந்தபட்சம் 13 ஆயிரம் 460 ரூபாவாக ஆகஸ்ட் மாதத்தில் அதிகரித்திருந்தது.
எனினும், குடிசன மற்றும் புள்ளிவிவரத் திணைக்களத்தின் புள்ளி விபரங்களின்படி 7 மாவட்டங்களில் குறைந்தபட்ச செலவு 14 ஆயிரம் ரூபாவுக்கு மேல் அதிகரித்துள்ளது.