பிரித்தானியாவில் பொலிஸ் நிலையத்துக்கு அருகே கண்டுபிடிக்கப்பட்ட கஞ்சா பண்ணை
Nila
2 years ago

இங்கிலாந்திலுள்ள Lowestoft என்னும் நகரிலுள்ள ஒரு இடத்தில் ஒரு நாற்றம் வீசுவதை பலரும் கவனித்திருக்கிறார்கள்.
அந்த இடத்துக்கு சற்று தொலைவில்தான் பொலிஸ் நிலையம் ஒன்றும் உள்ளது. ஆக, மக்களைப்போலவே, பொலிஸாரும் அந்த நாற்றத்தைக் கவனித்து அந்த இடத்துக்குச் சென்றிருக்கிறார்கள்.
அப்போது பெரிய கட்டிடம் ஒன்றிற்குள் ஒளிரும் ஒளி விளக்குகளுடன் கஞ்சா பண்ணை ஒன்று இருப்பதைக் கண்டுபிடித்துள்ளார்கள் பொலிஸார்.
அங்கு தூங்கியவண்ணம் உட்கார்ந்துகொண்டிருந்த காவலாளி ஒருவரை பொலிஸார் கைது செய்து அவரிடம் விசாரணை மேற்கொண்டிருக்கிறார்கள்.



