ஆசிரியர்களின் ஆடைகளிலும் எந்தவித மாற்றங்களையும் கொண்டு வருவதற்கு அரசாங்கம் தீர்மானிக்கவில்லை

Kanimoli
2 years ago
ஆசிரியர்களின் ஆடைகளிலும் எந்தவித மாற்றங்களையும் கொண்டு வருவதற்கு அரசாங்கம் தீர்மானிக்கவில்லை

பாடசாலை மாணவர்களின் ஆடைகளிலும், ஆசிரியர்களின் ஆடைகளிலும் எந்தவித மாற்றங்களையும் கொண்டு வருவதற்கு அரசாங்கம் தீர்மானிக்கவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. 

நாடாளுமன்ற அமர்வு இன்றைய தினம் காலை 09.30 மணிக்கு ஆரம்பமாகியிருந்தது.

இந்த சந்தர்ப்பத்தில் கருத்து தெரிவிக்கும் போதே கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். 

என்ற போதும் எந்தவொரு நபருக்கும் தனக்கு ஏற்ற ஆடையை தெரிவு செய்யும் ஜனநாயக ரீதியான சுதந்திரம் இருப்பதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் சுட்டிக்காட்டியிருந்தார். 

அத்துடன் பாடசாலை ஆசிரியைகள் வசதியான ஆடைகளை அணிந்து வர அனுமதிப்பது இந்நாட்டின் கலாச்சாரத்திற்கு புறம்பானது என மகாசங்கத்தினர் விடுத்துள்ள கருத்துக்களுக்கு பதிலளிக்கும் போதே அவர் இந்த விடயங்களை கூறியிருந்தார். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!