கடற்பரப்பில் அத்துமீறி பிரவேசித்து மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 15 பேர் கைது
Prabha Praneetha
2 years ago

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி பிரவேசித்து மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது, இரண்டு இந்திய படகுகளும் இலங்கை கடற்படையால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இன்று மாலை தலைமன்னாருக்கு வடக்கு கடற்பரப்பில் கடற்படையினர் மேற்கொண்ட விசேட ரோந்து நடவடிக்கையின் போது குறித்த மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.



