யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த அதி சொகுசு பஸ் கோர விபத்து : மூவர் உயிரிழப்பு – 16 பேர் படுகாயம்
Reha
2 years ago

வவுனியா – நொச்சுமோட்டை பாலத்திற்கு அருகில் இடம்பெற்ற பஸ் விபத்தில் சாரதி உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்து நேற்று நள்ளிரவு 12.15 அளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த அதி சொகுசு பஸ், வேகக் கட்டுப்பாட்டை இழந்து பாலத்தில் மோதுண்டு குடைசாய்ந்துள்ளது.
இதன்போது, பஸ்ஸின் சாரதி மற்றும் பெண்ணொருவர் உள்ளிட்ட மூவர் ஸ்தலத்தில் உயிரிழந்துள்ளனர்.
இதேவேளை குறித்த பஸ்ஸில் பயணித்த 16 பேர் காயமடைந்த நிலையில், நால்வர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து தொடர்பான விசாரணைகளை வவுனியா மற்றும் ஓமந்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



