ஹெலோவீன் நிகழ்வில் உயிரிழந்த இலங்கை பிரஜையின் சடலத்தை நாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை

Kanimoli
2 years ago
 ஹெலோவீன் நிகழ்வில்  உயிரிழந்த இலங்கை பிரஜையின் சடலத்தை நாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை

  தென் கொரியாவின் சியோல் நகரில் இடம்பெற்ற ஹெலோவீன் நிகழ்வின் போது ஏற்பட்ட சன நெரிசலில் சிக்கி உயிரிழந்த இலங்கை பிரஜையின் சடலத்தை நாட்டிற்கு கொண்டு வர நடவசிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதனை வௌிவிவகார அமைச்சர், ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவத்தில் மேலும் இலங்கையர்கள் பாதிக்கப்பட்டுள்ளனரா என்பதை கண்டறிய சியோலில் உள்ள பொலிஸார் மற்றும் வைத்தியசாலைகளுக்கு அதிகாரிகளை அனுப்பியுள்ளதாகவும், வௌிவிவகார அமைச்சு மற்றும் தென் கொரியாவிற்கான இலங்கை தூதரகம் ஊடாக மேலதிக தகவல்கள் திரட்டப்படுவதாகவும் அமைச்சர் கூறினார்.

சம்பவத்தில் உயிரிழந்த இளைஞர் தொழில் நிமித்தம் தென் கொரியாவுக்கு சென்றவர் அல்ல என்றும், அவர் கல்வி நடவடிக்கைகளுக்காக சென்றுள்ளதாக தொழில் மற்றும் வௌிநாட்டு வேலைவாய்ப்புகள் அமைச்சின் செயலாளர் R.P.A.விமலவீர தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.   

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!