வீட்டில் இளைஞரொருவர் நேற்று பிற்பகல் தூக்கிட்டு தற்கொலை
Kanimoli
2 years ago

வடக்கில் இளைஞரொருவர் நேற்று பிற்பகல் தூக்கிலிட்டு தற்கொளை செய்து கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இச் சம்பவம் சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கெருடாவில் உள்ள அவருடைய வீட்டில் இடம் பெற்றுள்ளது.
இதனை கண்ட உறவினர்கள் அவரை மீட்டு உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
இந் நிலையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவரின் சடலம் பிரேதப் பரிசோதனை மற்றும் மரண விசாரணைகளுக்காக சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
குறித்த இளைஞனின் மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.



