ஜே.வி.பி.யின் முதலாவது வெளிநாட்டு காரியாலயமாக மாலைதீவில் காரியாலயமொன்றை நிறுவ தீர்மானம்
Kanimoli
2 years ago

ஜே.வி.பி.யின் முதலாவது வெளிநாட்டு காரியாலயமாக மாலைதீவில் காரியாலயமொன்றை நிறுவ தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கட்சிக் காரியாலய அங்குரார்ப்பண நிகழ்விற்காக கட்சியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க எதிர்வரும் 3ம் திகதி மாலைதீவு விஜயம் செய்ய உள்ளார்.
மாலைதீவில் கட்சிக் காரியாலயம் நிறுவியதன் பின்னர் ஐரோப்பா, அமெரிக்கா, மத்திய கிழக்கு போன்ற நாடுகளிலும் கட்சிக் காரியாலயங்களை நிறுவுவதற்கு ஜே.வி.பி தீர்மானித்துள்ளது.
இந்த தகவல்களை கட்சியின் சிரேஸ்ட உறுப்பினரான டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
கட்சிக் காரியாலங்களை நிறுவுவதற்காக கட்சியின் உறுப்பினர்கள் குறித்த நாடுகளுக்கு விஜயம் செய்ய உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.



