அமெரிக்க சபாநாயகரின் கணவர் மீது சுத்தியலால் தாக்குதல்!

Mayoorikka
2 years ago
அமெரிக்க சபாநாயகரின் கணவர் மீது சுத்தியலால் தாக்குதல்!

அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் நான்சி பெலோசியின் கணவர், சுத்தியலால் தாக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வீட்டுக்குள் புகுந்த ஒருவரால் தாக்கப்பட்ட 82 வயதான பெலோசி, தலை மற்றும் வலது கையில் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சந்தேக நபர் சன் பிரான்சிஸ்கோ வீட்டிற்குள் நுழைந்த பின்னர், சபாநாயகர் நான்சி பெலோசியைப் பார்க்க வேண்டும் என்று கோரியதாகக் கூறப்படுகிறது. 

இந்த நிலையில் கொலை முயற்சி உள்ளிட்ட குற்றச்சாட்டில் 42 வயதுடைய குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 

இந்தச் சம்பவம், நேற்று இடம்பெற்றுள்ளது. தாக்குதல்தாரி, பெலோசியை ‘நான்சி வீட்டிற்கு வரும் வரை’ கட்டிவைக்க முயன்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!