பொதுஜன பெரமுனவில் இருந்து விலகி ஐக்கிய தேசியக் கட்சியில் இணையும் எண்ணம் எனக்கு இல்லை - பிரசன்ன ரணதுங்க

Kanimoli
2 years ago
 பொதுஜன பெரமுனவில் இருந்து விலகி ஐக்கிய தேசியக் கட்சியில் இணையும் எண்ணம் எனக்கு இல்லை - பிரசன்ன ரணதுங்க

"நாட்டின் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஆதரித்தாலும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து விலகி ஐக்கிய தேசியக் கட்சியில் இணையும் எண்ணம் எனக்கு இல்லை என ஆளும் தரப்பின் பிரதம கொறடாவான அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள விசேட அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

"ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக ரணில் விக்கிரமசிங்க இருந்தாலும் ஜனாதிபதி என்ற ரீதியில் அவரை நான் ஆதரிக்கின்றேன். அதற்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து நான் விலகிவிட்டேன் என்று தவறாக அர்த்தம்கொள்ளக்கூடாது.

யானையின் முதுகில் ஏறும் எண்ணம் எனக்கு இல்லை. 'மொட்டு'வில் இருந்தே எனது அரசியல் பயணம் தொடரும் என்றுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!