களனிதிஸ்ஸ அனல்மின் நிலையத்தில் கோளாறு
Mayoorikka
2 years ago

களனிதிஸ்ஸ அனல்மின் நிலையத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக மின் உற்பத்தி நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக மின்சார தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன.
நீண்ட கால திருத்தத்தின் பின்னர் மீண்டும் மின் உற்பத்தியை ஆரம்பித்துள்ள களனிதிஸ்ஸ அனல்மின் நிலையத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளதாகவும், அதனை மீளமைக்கும் பணியில் மின் பொறியியலாளர்கள் தற்போது ஈடுபட்டுள்ளதாகவும் தொழிற்சங்க பிரதிநிதிகள் தெரிவிக்கின்றனர்.



