சர்ச்சைக்குரிய இருமல் மருந்தின் உற்பத்தியை முற்றிலுமாக நிறுத்துமாறு இந்திய அதிகாரிகள் உத்தரவு
Prathees
2 years ago

சர்ச்சைக்குரிய இருமல் மருந்தின் உற்பத்தியை முற்றிலுமாக நிறுத்துமாறு சம்பந்தப்பட்ட தயாரிப்பு நிறுவனத்திற்கு இந்திய அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கு மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளதாக ஹரியானா மாநில சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மத்திய மற்றும் மாநில அரசுகளின் மருந்து துறை குழுக்கள் இணைந்து நடத்திய விசாரணையில், மருந்து தயாரிப்பில் 12 குறைபாடுகள் கண்டறியப்பட்டதாக மாநில அரசு ஏற்கனவே அந்நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்திய மருந்து நிறுவனம் தயாரித்த இருமல் சிரப் காரணமாக காம்பியாவில் குழந்தைகள் இறந்ததாக செய்திகள் வெளிவந்தபோது இந்த நெருக்கடி நிலை ஏற்பட்டது.



