அர்ஜென்டினாவில் நடந்த கால்பந்து போட்டியில் ரசிகர்களிடையே மோதல் - ரசிகர் பலி

Prasu
2 years ago
அர்ஜென்டினாவில் நடந்த கால்பந்து போட்டியில் ரசிகர்களிடையே  மோதல் - ரசிகர் பலி

இந்தோனேஷியா நாட்டில் கடந்த வாரம் நடந்த கால்பந்து போட்டியின் போது ஏற்பட்ட மோதலில் 139 பேர் இறந்தனர். 

இந்த சோக சம்பவம் மறைவதற்குள் அர்ஜென்டினாவில் நடந்த கால்பந்து போட்டியில் ரசிகர் ஒருவர் பலியாகிவிட்டார். 

அர்ஜென்டினாவில் நேற்று இரவு  உள்ளூர் கால்பந்து போட்டி நடந்தது. இதை காண ஏராளமான ரசிகர்கள் குவிந்து இருந்தனர். 

மைதானம் முழுவதும் நிரம்பிய நிலையில், மேலும் ரசிகர்கள் வந்ததால் உள்ளே செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. 

அவர்களை போலீசார் ஒழுங்குபடுத்தினர். அப்போது போலீசாருக்கும். ரசிகர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. 

உடனே போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினார்கள். இந்த சம்பவத்தில் ஒரு ரசிகர் இறந்தார். சிலர் காயம் அடைந்தனர்.  

போலீசாரின் கண்ணீர் புகை குண்டு தாக்குதலில் இருந்து தப்பிக்க ஏராளமான ரசிகர்கள் மைதானத்தின் மையப்பகுதிக்கு சென்றனர். 

உடனே போட்டி நிறுத்தப்பட்டது. வீரர்கள் தங்கள் அறைக்கு திரும்பினர். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!