விரைவில் திருமணமாகவுள்ள , உயர் கல்விக்காக வெளிநாடுகளுக்கு செல்லவுள்ள இளைஞர்களுக்காக சமையல் பாடநெறி ஆரம்பிக்கப்படவுள்ளது.

Kanimoli
2 years ago
விரைவில் திருமணமாகவுள்ள , உயர் கல்விக்காக வெளிநாடுகளுக்கு செல்லவுள்ள இளைஞர்களுக்காக சமையல் பாடநெறி  ஆரம்பிக்கப்படவுள்ளது.

விரைவில் திருமணமாகவுள்ள மற்றும்   உயர் கல்விக்காக வெளிநாடுகளுக்கு செல்லவுள்ள இளைஞர்களுக்காக சமையல் பாடநெறி ஒன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கபப்ட்டுள்ளது.

இந்த பாடநெறியானது சுற்றுலா மற்றும் ஹோட்டல் முகாமைத்துவ நிறுவனத்தினால் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அதன் தலைவர் சிரந்த பீரிஸ் தெரிவித்துள்ளார்.

நிலவியுள்ள பொருளாதார நெருக்கடியில் தாய் மற்றும் தந்தை ஆகிய இருவரும் தொழிலுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளமையினால் இளைஞர் யுவதிகள் தங்களுக்கு தேவையான உணவினை தாமே தயாரித்துக்கொள்ள வேண்டிய நிலைமைக்கு நிர்பந்திக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அதேநேரம் வெளிநாடுகளுக்கு உயர் கற்கை நெறிகளுக்காக செல்லவிருப்பவர்களுக்கும் இந்த பாடநெறி மிகவும் உறுதுணையாக அமையும் என சிரந்த பீரிஸ் கூறினார்.

அதேவேளை பெற்றோர்கள் மத்தியில் சுற்றுலா துறை குறித்து தவறான எண்ணங்கள் காணப்படுவதனால் தங்களது பிள்ளைகளை சுற்றுலா துறையில் ஈடுபடுத்துவதற்கு அச்சம் கொள்கின்றனர்.

எனவே அவர்கள் முதலாவதாக இவ்வாறான எண்ணங்களை அகற்றி வருமானம் தரக்கூடிய சுற்றுலா துறையை தேர்ந்தெடுக்க தனது பிள்ளைகளுக்கு பெற்றோர் வழிகாட்டியாக மாறவேண்டும் எனவும் சிரந்த பீரிஸ் தெரிவித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!