அரச ஊழியர்களுக்கு வெளிநாடு செல்வதற்கு அனுமதி வழங்குவதன் மூலம் அரச சேவைக்கு பல பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும் - சம்பிக்க
Prasu
3 years ago
அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு 05 வருட காலத்திற்கு வெளிநாடு செல்வதற்கு அனுமதி வழங்குவதன் மூலம் அரச சேவைக்கு பல பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும் என பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
எனினும் அரசாங்க நிறுவனங்களில் பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு வெளிநாடு செல்ல அனுமதி வழங்கப்பட வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.