சட்டவிரோதமாக படகு மூலம் இந்தியா செல்ல முயன்ற 6 பேர் தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து கைது

Kanimoli
2 years ago
சட்டவிரோதமாக படகு மூலம் இந்தியா செல்ல முயன்ற 6 பேர் தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து கைது

சட்டவிரோதமாக படகு மூலம் இந்தியா செல்ல முயன்ற 6 பேர் தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்ட நிலையில் இவர்களில் மூவரை எதிர்வரும் 6ஆம் திகதி வரை (6-10-2022) விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருகோணமலை பகுதியை சேர்ந்த இரண்டு ஆண்கள், பெண்  மற்றும் மூன்று சிறுவர்கள் உள்ளடங்களாக 6 பேர் கடந்த செவ்வாய்க்கிழமை(27.09.2022) இரவு தலைமன்னார் கடல் ஊடாக சட்ட விரோதமான முறையில் இந்தியா செல்ல முயன்றுள்ளனர்.

 கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது குறித்த 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கைது செய்யப்பட்ட குறித்த 6 பேரும் தலைமன்னார் பொலிஸார் விசாரணைகளின் பின்னர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர். இதன் போது விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான் 18 வயதிற்கு மேற்பட்ட இரண்டு ஆண்கள் மற்றும் பெண்ணை எதிர்வரும் 6ஆம் திகதி வரை (06-10-2022) விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன் 18 வயதுக்கு குறைந்த ஏனைய மூன்று சிறுவர்களையும் சிறுவர் நன்னடத்தை பிரிவு அதிகாரியிடம் ஒப்படைக்க உத்தரவிட்டுள்ளார். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!