உலகில் எந்த நாடும் இரவுப் பொருளாதாரம் இல்லாமல் வளர்ந்ததே கிடையாது: டயானா கமகே
Mayoorikka
2 years ago

இரவுப் பொருளாதாரம் என்பது மக்கள் இரவில் வெளியில் சென்று மகிழ்ந்து அதன் மூலம் அரசாங்கத்திற்கு பணம் சம்பாதிப்பதே என சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தெரிவித்துள்ளார்.
உலகில் எந்த நாடும் இரவுப் பொருளாதாரம் இல்லாமல் வளர்ந்ததே கிடையாது என அவர் தெரிவித்தார்
மக்கள் பகலில் சம்பாதிப்பதை செலவழிக்க நேரமும் இடமும் இல்லாவிட்டால் நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாது
இரவு 10:00 மணிக்குப் பிறகு சுற்றுலாப் பயணிகள் இந்த நாட்டிற்கு வருவதில்லை, அவர்கள் தங்கள் அறைகளுக்குச் சென்று தூங்க மாட்டார்கள், அவர்கள் பணத்தை செலவழிக்க, நாட்டில் இரவு கலாச்சாரம் உருவாக்கப்பட வேண்டும்
இரவுப் பொருளாதாரம் என்பது விபச்சாரம் என்று சொன்னவர்கள், விபச்சாரத்தை இரவில் மட்டும் செய்வது இல்லை பகல் முழுவதும் செய்வதுதான் என சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தெரிவித்துள்ளார்.



