கஜீமாவத்தையில் நேற்றிரவு பரவிய பெரும் தீயினால் குறைந்தது 80 வீடுகள் எரிந்து நாசம்
Kanimoli
2 years ago

கஜீமாவத்தையில் நேற்றிரவு பரவிய பெரும் தீயினால் குறைந்தது 80 வீடுகள் எரிந்து நாசமானதுடன் பலர் இடம் பெயர்ந்துள்ளனர்.
தீயினால் ஏற்பட்ட காயங்கள் குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
நேற்று இரவு அப்பகுதி முழுவதும் பரவிய தீ, பல மணி நேர போராட்டத்திற்கு பின் அணைக்கப்பட்டது.
தீயை அணைக்க ஏராளமான தீயணைப்பு படையினர் ஈடுபடுத்தப்பட்டனர்.
தீயினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்குமாறும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.



