வங்காளதேச படகு விபத்து - உயிரிழந்தோர் எண்ணிக்கை 64 ஆக உயர்வு
#Bangladesh
#Accident
#Death
Prasu
3 years ago
வங்காளதேசத்தின் பஞ்சகர் மாவட்டத்தில் உள்ள போடா, பஞ்ச்பீர், மரியா மற்றும் பங்கரி பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் துர்கா பூஜை விழாவில் பங்கேற்க படகு மூலம் போதேஸ்வரி கோவிலுக்கு பயணம் மேற்கொண்டனர்.
கரடோயா ஆற்றில் சென்று கொண்டிருந்த அவர்களது படகு, அதிக பாரம் காரணமாக கவிழ்ந்ததில் 8 குழந்தைகள், 12 பெண்கள் உள்பட 24 பேர் நீரில் மூழ்கி இறந்தனர் என முதல் கட்ட தகவல் வெளியானது.
மேலும் 25க்கும் மேற்பட்டோரை காணவில்லை என்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில், படகு கவிழ்ந்த விபத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 64 ஆக உயர்ந்துள்ளது.
மேலும், காணாமல் போன 20 பேரை தேடும் பணியில் மீட்புக்குழு ஈடுபட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.