தம்புத்தேகம பகுதியில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதேச சபை உறுப்பினர் கைது

Prasu
2 years ago
தம்புத்தேகம பகுதியில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதேச சபை உறுப்பினர் கைது

தம்புத்தேகம பகுதியில் நேற்று திங்கட்கிழமை (26) இடம்பெற்ற கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர் பொதுஜன பெரமுனவின் ராஜாங்கனை பிரதேச சபை உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

தம்புத்தேகம பகுதியில் உள்ள தனியார் வங்கியொன்றிலிருந்து 223 இலட்சம்  ரூபா பணத்தை கொள்ளையடித்துச் சென்ற இரண்டு பேரை ஆயுதங்களுடன் பொலிஸார் நேற்று மடக்கிப்பிடித்து கைது செய்தனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்ட கொள்ளையர்களிடமிருந்து பெறப்பட்ட தகவல்களுக்கு அமைய, பொதுஜன பெரமுனவின் பிரதேச சபை உறுப்பினர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!