நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் 3 ஆவது மின்பிறப்பாக்கி செயலிழந்ததன் காரணமாக மின்வெட்டு காலம் நீடிக்கப்படலாம் - ஜனக ரத்நாயக்க
Reha
2 years ago

நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் 3 ஆவது மின்பிறப்பாக்கி இயந்திரம் செயலிழந்ததன் காரணமாக மின்வெட்டு காலம் நீடிக்கப்படலாம் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
அதன்படி, மின்வெட்டு காலத்தை நீடிப்பது தொடர்பான அறிவிப்பு எதிர்காலத்தில் வெளியிடப்பட உள்ளது.
இதனால், இன்று முதல் மின்தடை அமுலாகும் நேர இடைவெளி நீடிக்கப்படலாம் என பொதுப்பயன்பாடுகள் ஆணைக்ககுழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
முன்னதாக, மின்சார சபை விடுத்த கோரிக்கைக்கு அமைய இன்றும் நாளையும் 2 மணித்தியாலங்களும், 20 நிமிடங்களும் மின்துண்டிப்பு அமுலாக்கப்படவுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்திருந்தது.



