அர்ஜென்டினாவில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் தீ விபத்து- 3 பேர் உயிரிழப்பு
Prasu
2 years ago

அர்ஜென்டினா தெற்கு பகுதியில் உள்ள நியூகன் மாகாணத்தில் பிளாசா குயின்குல் நகரில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை இயங்கி வருகிறது.
இந்த ஆலையின் கச்சா எண்ணெய் தொட்டியில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டு தீப்பிடித்தது. தீ மளமளவென மற்ற எண்ணெய் தொட்டிக்கும் பரவியது.
இது பற்றி அறிந்ததும் தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர். இந்த விபத்தில் 3 பேர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே இறந்தனர்.
இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.



