ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேயின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்காக நாளை ஜப்பான் புறப்படும் ஜனாதிபதி!
Mayoorikka
2 years ago

ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேயின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட இலங்கை தூதுக்குழுவினர் நாளை இரவு ஜப்பான் செல்லவுள்ளனர்.
இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா மற்றும் ஜப்பானிய அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரிகளை சந்தித்தும் கலந்துரையாடவுள்ளார்.
ஜப்பானின் நீண்ட காலம் பிரதமராக இருந்த 67 வயதான ஷின்சோ அபே, கடந்த ஜூலை 8ஆம் திகதி இடம்பெற்ற அரசியல் கட்சி பிரச்சாரக் கூட்டத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்நிலையில் அடுத்த வாரம் இடம்பெறும் ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேயின் இறுதிச் சடங்கில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.



